இந்தியன் எண்ணெய்க் கழக நிறுவனத்தின் சந்தீப் குமார் குப்தா, இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயுப் பயன்பாட்டு நிறுவனமான இந்திய வாயு ஆணையம் அல்லது GAIL என்ற நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ள மனோஜ் ஜெயினுக்குப் பதிலாக இவர் நியமிக்கப் படுவார்.
இந்தப் பரிந்துரையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு சரிபார்க்கும்.
மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்தியப் புலனாய்வு வாரியம் போன்ற ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் தடையில்லாச் சான்றுகளை வழங்கியப் பிறகு இந்த நியமனம் மேற் கொள்ளப் படும்.