பெங்களூரு பெருநகர ஆணையம் (GBA) ஆனது, 'குப்பை கொட்டும் விழா' என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது.
விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும் வேண்டி குடிமைப் பணிச் சேவையாளர்கள் வேண்டுமென்றே, வழக்கமாகக் குப்பைகளை வெளியே கொட்டுபவர்களின் வீடுகளுக்கு வெளியே குப்பைகளைக் கொட்டினர்.
இந்தப் பிரச்சாரம் ஆனது பனசங்கரியில் தொடங்கி 218 வீடுகளை இலக்காகக் கொண்டு, 2.8 லட்சம் மதிப்புள்ள அபராதத்தை வசூலித்தது.
பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் (BSWML) ஆனது, இலவசமாகப் பிரிக்கப் பட்ட கழிவுகளை அகற்றுவதற்கும், குப்பைகள் அதிகம் கொட்டப்படும் பகுதிகளைக் குறைப்பதற்கும் பெங்களூரு முழுவதும் 65 கழிவுச் சேகரிப்பு மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.