தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியில் (GAVI) இருந்து தனது ஆதரவை அமெரிக்கா விலக்கிக் கொள்கிறது.
GAVI என்பது WHO, UNICEF, கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் உலக வங்கி உள்ளிட்ட ஒரு பொது-தனியார் கூட்டாண்மை ஆகும்.
வழக்கமான நோய்த்தடுப்பு திட்டங்கள் மூலம் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு இது நிதி வழங்கி, சுமார் 18 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
இது உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு வலையமைப்பு (VSN) என்ற திட்டத்திலும் உறுப்பினராக உள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே WHO அமைப்பு, பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை, UN மனித உரிமைகள் சபை, UN நிவாரணம் மற்றும் பணிகள் முகமை (UNRWA) போன்ற பல அமைப்புகளிலிருந்தும் விலகியுள்ளது.