உலகளாவியப் பருவநிலை மற்றும் சுகாதாரக் கூட்டணி (GCHA) ஆனது "Cradle to Grave: The Health Toll of Fossil Fuels and the Imperative for a Just Transition" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
புதைபடிவ எரிபொருள்கள் ஆனது, கருப்பையில் உள்ள குழந்தை முதல் முதுமை வரையில் மனிதர்களைப் பாதிக்கின்ற பொது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்துகின்றன என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த அறிக்கை இந்தியாவின் நிலக்கரி மண்டலத்தில் குழந்தை பருவ ஆஸ்துமா, காசநோய் மற்றும் மாசுபாட்டுடன் தொடர்புடைய பிறவிக் கோளாறுகள் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
புதைபடிவ எரிபொருள் மாசுபடுத்திகளுக்கு உட்படுவது அனைத்து வயதினரிடையேயும் கருச்சிதைவு, புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது.
புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகளிலிருந்து வரும் நச்சு இரசாயனங்கள் பல தசாப்தங்களாக சுற்றுச்சூழலில் நீடித்து நிலைத்து இருக்கின்றன, இதனால் மனித தலைமுறைகளுக்கு இடையேயான சுகாதாரச் சேதம் ஏற்படுகிறது.
சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள விளிம்பு நிலைச் சமூகங்கள் நோய், வறுமை மற்றும் இடப்பெயர்ச்சியால் அளவிற்கொள்ளாத வகையில் பாதிக்கப்படுகின்றன.
புதிய புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் மாசுபடுத்தும் நிறுவனங்கள் பொறுப்பேற்கும் கொள்கையை உடனடியாக அமல்படுத்துதல் உள்ளிட்ட அவசரக் கொள்கை மாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.