TNPSC Thervupettagam
September 26 , 2025 15 hrs 0 min 22 0
  • உலகளாவியப் பருவநிலை மற்றும் சுகாதாரக் கூட்டணி (GCHA) ஆனது "Cradle to Grave: The Health Toll of Fossil Fuels and the Imperative for a Just Transition" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • புதைபடிவ எரிபொருள்கள் ஆனது, கருப்பையில் உள்ள குழந்தை முதல் முதுமை வரையில் மனிதர்களைப் பாதிக்கின்ற பொது சுகாதார அவசரநிலையை ஏற்படுத்துகின்றன என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
  • இந்த அறிக்கை இந்தியாவின் நிலக்கரி மண்டலத்தில் குழந்தை பருவ ஆஸ்துமா, காசநோய் மற்றும் மாசுபாட்டுடன் தொடர்புடைய பிறவிக் கோளாறுகள் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்புகளை எடுத்துக் காட்டுகிறது.
  • புதைபடிவ எரிபொருள் மாசுபடுத்திகளுக்கு உட்படுவது அனைத்து வயதினரிடையேயும் கருச்சிதைவு, புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது.
  • புதைபடிவ எரிபொருள் செயல்பாடுகளிலிருந்து வரும் நச்சு இரசாயனங்கள் பல தசாப்தங்களாக சுற்றுச்சூழலில் நீடித்து நிலைத்து இருக்கின்றன, இதனால் மனித தலைமுறைகளுக்கு இடையேயான சுகாதாரச் சேதம் ஏற்படுகிறது.
  • சுரங்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகிலுள்ள விளிம்பு நிலைச் சமூகங்கள் நோய், வறுமை மற்றும் இடப்பெயர்ச்சியால் அளவிற்கொள்ளாத வகையில் பாதிக்கப்படுகின்றன.
  • புதிய புதைபடிவ எரிபொருள் சார்ந்தத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் மாசுபடுத்தும் நிறுவனங்கள் பொறுப்பேற்கும் கொள்கையை உடனடியாக அமல்படுத்துதல் உள்ளிட்ட அவசரக் கொள்கை மாற்றங்களை மேற்கொள்வதற்கு இந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்