TNPSC Thervupettagam

GDP மற்றும் CPI கணக்கீடுகளுக்கு வெவ்வேறு அடிப்படைக் கணக்கீட்டு ஆண்டு

June 28 , 2025 7 days 51 0
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் சில்லறைப் பணவீக்கத்தினை (நுகர்வோர் விலைக் குறியீடு அல்லது CPI மூலம் அளவிடப்படுகிறது) கணக்கிடுவதற்கு அரசாங்கம் வெவ்வேறு அடிப்படை ஆண்டுகளை ஏற்க உள்ளது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான முன்மொழியப்பட்ட அடிப்படை ஆண்டு 2022–23 ஆகும், அதே நேரத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டிற்கான அடிப்படை ஆண்டு 2023–24 ஆகும்.
  • தற்போது, ​​GDP மற்றும் CPI ஆகிய இரண்டும் 2011–12 ஆம் ஆண்டினை அதன் அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்திக் கணக்கிடப்படுகின்றன.
  • மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2022–23 ஆம் ஆண்டினை ஒரு அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தொழில்துறைகளின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASI), இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASUSE) மற்றும் அந்த ஆண்டில் நடத்தப்படும் வீட்டு நுகர்வு கணக்கெடுப்பு போன்ற முக்கியத் தரவு ஆதாரங்கள் காரணமாகும்.
  • விலை சார் தகவல் சேகரிப்புக் கணக்கெடுப்பு ஆனது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியதால், CPI கணக்கெடுப்பிற்கு 2023–24 ஆம் ஆண்டினை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • GDP மற்றும் CPI கணக்கீடுகளுக்கான புதிய அடிப்படை ஆண்டுகள் 2026–27 ஆம் நிதி ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்