“GeM சம்வாத்” ஆனது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளரும் GeMன் (அரசின் மின்னணு சந்தையிடல்) தலைவருமான அனுப் வாதவன் என்பவரால் புது தில்லியில் தொடங்கப் பட்டுள்ளது.
இது உள்ளூர் விற்பனையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்காக தொடங்கப் பட்டுள்ளது.
GeM சம்வாத் சந்தையானது இந்த அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிகள் மற்றும் முன்னேற்றங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு வேண்டிய கருத்துகளைப் பயனர்களிடமிருந்துப் பெற எதிர்பார்க்கின்றது.
GeM பற்றி
GeM ஆனது 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தொடங்கப் பட்டது.
இது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும் தகவல் தொடர்பற்ற, காகிதமற்ற, மற்றும் பணமில்லாத வகையில் கொள்முதல் செய்வதன் மூலமும் பொதுக் கொள்முதலின் தன்மையினை மாற்றியுள்ளது.