அரசாங்க மின் சந்தை (GeM) ஆனது, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று அதன் 9வது நிறுவன தினத்தைப் புது டெல்லியில் கொண்டாடியது.
2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் GeM சந்தையில் மொத்த வணிக மதிப்பு (GMV) 5.4 லட்சம் கோடி ரூபாயாகப் பதிவானது.
GeM ஆனது, வெளிப்படையான மற்றும் திறம் மிக்க பொது கொள்முதலுக்கான டிஜிட்டல் தளமாக 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளில், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் (SHGs), கைவினைஞர்கள் மற்றும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் (MSEs) ஆகியவற்றில் 1.5 லட்சம் பேர் GeM உடன் இணைந்தனர்.
2025 ஆம் ஆண்டு கொண்டாட்டம் ஆனது, 'Ease Access and Inclusion' என்ற கருத்துருவில் நடத்தப் பட்டது.
GeM ஆனது மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறை ஆதரவை வழங்குகிறது.