TNPSC Thervupettagam
July 28 , 2025 2 days 26 0
  • அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையானது GENIUS சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இது அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள் காயின்களுக்கான (நிலையான எண்ணிம நாணயங்கள்) அமெரிக்காவின் முதல் கூட்டாட்சிக் கட்டமைப்பாகும்.
  • ஸ்டேபிள்காயின் மசோதாவானது, பங்குகளின் உரிமத்துவ வழங்கலானது (டோக்கன்) அமெரிக்க டாலர்கள் மற்றும் குறுகிய கால கருவூல ரசீதுகள் போன்ற நிலையற்றத் தன்மை கொண்டச் சொத்துக்களின் பின்னணியில் வழங்கப்பட வேண்டும் என்று கோருகிறது.
  • ஸ்டேபிள்காயின்கள் என்பது நிலையான மதிப்பைப் பேணுவதற்காக  வடிவமைக்கப் பட்ட ஒரு வகை இணைய சங்கேதப் பணமாகும் (கிரிப்டோகரன்சி) ஆகும்.
  • இவை மிகவும் பொதுவாக பங்குகளின் உரிமங்களுக்கு இடையில் நிதியை பரிமாற்ற இணைய சங்கேதப் பண வர்த்தகர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
  • இது இணைய சங்கேதப் பணத் துறைக்கு ஒரு முக்கியப் படி நிலையைக் குறிக்கிறது.
  • அந்தச் சபையானது மேலும் இரண்டு இணைய சங்கேதப் பண மசோதாக்களையும் நிறைவேற்றியது.
  • அதில் ஒன்று தெளிவுச் சட்டம் என்று அழைக்கப்படுகின்ற, எண்ணிம/டிஜிட்டல் சொத்துக்களுக்கான பரந்த ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குகின்ற சட்டம் ஆகும்.
  • மற்றொன்று அமெரிக்க மத்திய வங்கியின் எண்ணிம/டிஜிட்டல் நாணயத்தைத் தடை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்