GHADC திருத்தம்: தேர்தலுக்கான பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் விதி
March 26 , 2026 80 days 160 0
மேகாலயாவில் உள்ள காரோ மலைப்பகுதி தன்னாட்சி மாவட்டக் குழு (GHADC), சபையில் தேர்தலில் போட்டியிட பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் (ST) சான்றிதழ் கட்டாயம் என்ற விதியைத் திருத்தியுள்ளது.
இந்தத் திருத்தம் என்பது தேர்தலில் போட்டியிடும் தகுதியை அங்கீகரிக்கப்பட்ட பழங் குடியினருக்கு மட்டுமே கட்டுப்படுத்துவதுடன் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்தாலும் பழங்குடி அல்லாதவர்களை இது விலக்குகிறது.
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் செயல்படும் இந்த சபை பழங்குடியின பகுதிகளுக்கு தன்னாட்சியை வழங்குவதுடன் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நிர்வாகத்தையும் பாதுகாக்கிறது.
காரோ மலைப்பகுதியில் பழங்குடியினர் அல்லாத வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி இட முயன்றதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இந்த விதி குறித்த முந்தைய அறிவிப்பு நடைமுறை குறைபாடுகள் காரணமாக உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையடுத்து தற்போது முறையான திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பழங்குடியின அடையாளத்தைப் பாதுகாப்பதையும், பழங்குடி சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதையும், பழங்குடியின பகுதிகளில் சுய-ஆட்சியை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.