TNPSC Thervupettagam

GHADC பதவிக்காலம் நீட்டிப்பு 2026

March 22 , 2026 15 hrs 0 min 35 0
  • மேகாலயா அரசு, காரோ மலைகள் தன்னாட்சி மாவட்டக் குழுவின் (GHADC) பதவிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • கரோ மலைப் பகுதியில் நிலவும் போராட்டங்கள் மற்றும் அமைதியின்மைக்கு மத்தியில், மேகாலயாவின் ஷில்லாங்கில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • GHADC தேர்தல்களில் பழங்குடியினர் அல்லாதோர் பங்கேற்பதைக் கட்டுப்படுத்தக் கோரும் கோரிக்கைகள் தொடர்பாக இந்தப் பிரச்சனை எழுந்துள்ளது.
  • GHADC என்பது இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ், பழங் குடியினரின் உரிமைகள் மற்றும் நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
  • இந்த நீட்டிப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதோடு, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்