TNPSC Thervupettagam

GIG தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

August 28 , 2026 16 days 90 0
  • இந்தியாவின் குறிப்பிட்ட கால தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) 2026 ஆம் ஆண்டில் முதல் முறையாக டிஜிட்டல் மற்றும் வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறித்த தனித் தரவுகளைச் சேகரிக்க வாய்ப்புள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பு உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வீட்டு சேவை வழங்குநர்கள் போன்ற தொழிலாளர்களை உள்ளடக்கும்.
  • அவர்களது வருவாய், வேலை நேரம் மற்றும் வேலை நிலைமைகளும் பதிவு செய்யப் படும்.
  • இந்தத் தரவு பரிசோதனையின் அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் இத்தகையத் தொழிலாளர்கள் பரந்த சுயதொழில் செய்யும் பிரிவின் கீழ் தொடர்ந்து இருப்பார்கள்.
  • PLFS 2026 ஆம் ஆண்டின் முடிவுகள் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப் படுகின்றன.
  • இந்தத் தரவுகள் அரசு நலத்திட்டக் கொள்கைகளை உருவாக்கவும் சமூகப் பாதுகாப்பு குறியீட்டின் விதிகளை செயல்படுத்தவும் உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்