கர்நாடகா மாநிலம், ஜனவரி 2026ல் கர்நாடக இணையதளம் வழியே திரட்டப்படும் Gig தொழிலாளர்கள் நல மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது.
இது கர்நாடக இணையதளம் வழியே திரட்டப்படும் Gig தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நல மேம்பாடு) சட்டம், 2025-இன் கீழ் அமைக்கப்பட்டது.
இந்த வாரியத்திற்கு தொழிலாளர் துறை அமைச்சர் பதவிவழித் தலைவராக உள்ளார் என்ற நிலையில், இதில் மூத்த அதிகாரிகள், நான்கு Gig தொழிலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் நான்கு இணையவழி ஒருங்கிணைப்பாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் (ஸொமேட்டோ, ஊபர், ஓலா, அமேசான்) ஆகியோர் அடங்குவர்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து இணையவழி ஒருங்கிணைப்பாளர் நிறுவனங்களும் Gig தொழிலாளர்களும் இந்த வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதோடுமேலும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் இதில் சமூக நலப் பாதுகாப்புப் பலன்களுக்காக ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.
கர்நாடகா அரசு இணையவழி ஒருங்கிணைப்புத் தளங்கள் மீது 1%–1.5% நலன்புரி கட்டணத்தை விதிக்கிறது என்பதோடு நிதி போதுமானதாக இல்லாத பட்சத்தில் இது 5% வரை விதிக்கப் படலாம்.
தமிழ்நாடு இந்தியாவின் முதல் Gig தொழிலாளர்கள் நல வாரியத்தை உருவாக்கியது.
தமிழ்நாடு இணையதளம் வழியே திரட்டப்படும் Gig தொழிலாளர்கள் நல வாரியம் டிசம்பர் 2023-ல் முறையாக நிறுவப்பட்டது.
அடிப்படை சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குவதற்காக, 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கைமுறைத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டது.