தெலுங்கானா அமைச்சரவையானது, 2025 ஆம் ஆண்டு இணைய வழி மூலம் திரட்டப் பட்ட தொழிலாளர்கள் மற்றும் இணைய தள (GIG) தொழிலாளர்கள் வரைவு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளர் நலனை மேற்பார்வையிடவும் வெளிப்படையான கட்டணங்களை உறுதி செய்யவும் இது ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தை உருவாக்குகிறது.
இணைய தளங்கள் 60 நாட்களுக்குள் தொழிலாளர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதோடுதொழிலாளர்கள் மாநிலத் திட்டங்களை அணுக வேண்டி இதில் சுயமாகவும் பதிவு செய்யலாம்.
அரசாங்கப் பங்களிப்புகள், பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) நிதிகள் மற்றும் சேவைத் தொகுப்பு நிறுவனங்கள் கட்டணங்களைப் பயன்படுத்தி ஒரு நல நிதி உருவாக்கப் படும்.
விதிகளை மீறும் தளங்களுக்கான குறை தீர்க்கும் அமைப்புகள் மற்றும் அபராதங்களையும் இந்தச் சட்டம் வழங்குகிறது.