TNPSC Thervupettagam

GIG தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு வாரியம்

November 2 , 2026 5 days 69 0
  • அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும் (GIG) தொழிலாளர்களுக்கான தேசிய சமூக பாதுகாப்பு வாரியத்தை அமைப்பது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • அமைப்புசாரா, வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும்  தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சமூகப் பாதுகாப்பு குறியீடு 2020 இன் கீழ் இந்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரின் தலைமையில் செயல்படும் மற்றும் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள், திரட்டுபவர்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்குவர்.
  • பாரம்பரிய முதலாளி-தொழிலாளி உறவுக்கு வெளியே உள்ள பணி ஏற்பாடுகள் மூலம் வலைதளம் மூலம் திரட்டப்பட்டு செயல்படும்  தொழிலாளர்கள் சம்பாதிக்கிறார்கள், அதே சமயம் சாலையோர வணிகம் செய்யும் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களுடன் அவர்களை இணைக்கும் இணையதளங்கள் மூலம் சேவைகளை வழங்குகிறார்கள்.
  • இந்த வாரியம் மத்திய அரசுக்கு நலத்திட்டங்களைப் பரிந்துரைக்கிறது, சமூகப் பாதுகாப்பு விஷயங்களில் ஆலோசனை வழங்குகிறது மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கிறது.
  • இது மாநில அளவிலான பதிவு பராமரிப்பு மற்றும் தொடர்புடைய சமூக பாதுகாப்பு நிதி மற்றும் கணக்கில் இருந்து செய்யப்படும் செலவினங்களையும் மதிப்பாய்வு செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்