GIMS அல்லது அரசின் உடனடியாக செய்தி அனுப்புதல் அமைப்பு
December 18 , 2019 2062 days 680 0
GIMS (Government Instant Messaging System - அரசின் உடனடியாக செய்தி அனுப்புதல் அமைப்பு) என்பது பாதுகாப்பான உள்துறைப் பயன்பாட்டிற்காக கட்செவி மற்றும் டெலிகிராம் போன்ற புகழ்பெற்ற செய்தி அனுப்புதல் தளங்களுக்கு இணையான ஒரு இந்திய அமைப்பாகும்.
இது தேசியத் தகவல் மையத்தின் (National Informatics Centre - NIC) கேரளப் பிரிவினால் வடிவமைத்து, உருவாக்கப்பட்டுள்ளது.
இது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் உள்ள பணியாளர்களுக்காக அரசின் உள் மற்றும் வெளி அமைப்புத் தகவல் தொடர்புகளுக்காக தொகுக்கப் பட்டுள்ளது.
கட்செவியைப் போலவே, GIMS ஆனது செய்தி அனுப்புவரிடமிருந்து அதைப் பெறுபவருக்காக ரகசிய (பாதுகாப்பு) குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றது.