TNPSC Thervupettagam
July 23 , 2025 4 days 35 0
  • உலக வங்கியின் இந்த அறிக்கையானது Global Findex 2025 என்று தலைப்பிடப்பட்டது.
  • இது இந்தியாவின் எண்ணிம மற்றும் நிதி உள்ளடக்கத்தில் உள்ள சாதனைகளைப் பிரதிபலித்தது.
  • இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்களின் அளவு சற்றேறக் குறைய 90 சதவீதமாக உள்ளது.
  • இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி வசதிகளைப் பயன்படுத்துதாமல் செயலற்ற கணக்குகளைக் கொண்டுள்ளனர்.
  • நாட்டின் மிக அதிகப்படியான செயலற்ற கணக்குகளுக்கு ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்திய வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 35% பேர் மட்டுமே செயலற்ற கணக்குகளைக் கொண்டிருந்தனர்.
  • இது மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரங்களில் சராசரியாக உள்ள 5% செயலற்ற கணக்குகளின் விகிதத்தை விட 7 மடங்கு அதிகம்.
  • 16 சதவீதக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இல்லை.
  • இது மற்ற அனைத்து குறைந்த மற்றும் நடுத்தர வருமானம கொண்ட நாடுகளின் பொருளாதாரங்களின் சராசரி 4 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்