உலக சுகாதார அமைப்பு, GLP-1 உணரி இயக்கிகளை இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் 24வது மாதிரிப் பட்டியலில் (EML) சேர்த்து உள்ளது.
இதில் செமகுளுடைடு, டுலாகுளுடைடு, லிராகுளுடைடு மற்றும் டைர்செபடைடு ஆகியவை அடங்கும்.
இந்த மருந்துகள் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய இருதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது உடல் பருமன் உள்ள வயது வந்த நபர்களுக்காகக் குறிக்கப்படுகின்றன.
உலகளவில், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான நபர்கள் சிகிச்சை பெறாமல் உள்ளனர்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விகிதங்கள் அதிகரித்து வருவதுடன், உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
GLP-1 உணரி ஏற்பிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவினைக் குறைக்கவும் எடை குறைப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன.
EML பட்டியலில் பட்டியலிடுவது இந்த மருந்துகளின் மலிவு விலை மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும் மருந்து அணுகலை மேம்படுத்தவும் WHO ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அத்தியாவசிய மருந்துகளின் மாதிரிப் பட்டியலைப் புதுப்பிக்கிறது.