TNPSC Thervupettagam
September 21 , 2025 14 hrs 0 min 17 0
  • உலக சுகாதார அமைப்பு, GLP-1 உணரி இயக்கிகளை இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் 24வது மாதிரிப் பட்டியலில் (EML) சேர்த்து உள்ளது.
  • இதில் செமகுளுடைடு, டுலாகுளுடைடு, லிராகுளுடைடு மற்றும் டைர்செபடைடு ஆகியவை அடங்கும்.
  • இந்த மருந்துகள் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய இருதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது உடல் பருமன் உள்ள வயது வந்த நபர்களுக்காகக் குறிக்கப்படுகின்றன.
  • உலகளவில், 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலான நபர்கள் சிகிச்சை பெறாமல் உள்ளனர்.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விகிதங்கள் அதிகரித்து வருவதுடன், உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • GLP-1 உணரி ஏற்பிகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவினைக் குறைக்கவும் எடை குறைப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன.
  • EML பட்டியலில் பட்டியலிடுவது இந்த மருந்துகளின் மலிவு விலை மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும் மருந்து அணுகலை மேம்படுத்தவும் WHO ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அத்தியாவசிய மருந்துகளின் மாதிரிப் பட்டியலைப் புதுப்பிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்