தமிழக மாநில அரசானது நீதிபதி (ஓய்வு) G.M. அக்பர் அலி தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
இது ஆட்சேர்ப்பு/தேர்வுச் செயல்முறையின் மீதான அதன் தீர்ப்பின் ஒரு தாக்கத்தை ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை முன்மொழியும்.
பாரம்பரியமாக, மாநில அரசானது 200 அம்ச (இட ஒதுக்கீடு) தேர்வுப் பட்டியல் என்ற முறையைப் பின்பற்றி, அதன் மூலம் அரசு நியமனங்களுக்கான அதன் தரவரிசைப் பட்டியல்களைத் தயாரித்து வந்தது.
இந்த முறையின் ஒரு பகுதியாக, BC, BCM, MBC மற்றும் DNC, SC, மற்றும் ST பிரிவைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த முறையானது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பதவி உயர்வில் ஒரு சமமான வாய்ப்பினை வழங்குவதைக் கருத்தில் கொண்டு, சமூகப் பிரிவுகளுக்குள் பணி மூப்பு மற்றும் தகுதியை நிர்ணயித்துள்ளது.
இருப்பினும், இந்த நடைமுறையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் ரத்து செய்யக் கோரப்பட்டது.
2003 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு TNPSC மூலம் நேரடியாக தேர்வு செய்யப் பட்ட தேர்வர்களின் பணி மூப்பு நிலையை, தேர்வுச் செயல்முறையில் TNPSC ஆணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் மட்டும் திருத்தப்பட வேண்டும் என்றும், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அல்ல என்றும் நீதிமன்றம் மாநில அரசைக் கோரியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது, தமிழ்நாடு மாநிலக் கருவூலக் கணக்குப் பணிகளில் (2007-2008) நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட கணக்கு அலுவலர்கள் தொடர்பாக TNPSC அளித்த தகுதிப் பட்டியலின்படி நுழைவு நிலை பணி மூப்புத் திருத்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.