TNPSC Thervupettagam

GRAP நிலை-3 வாகனக் கட்டுப்பாடுகள்

November 15 , 2025 13 hrs 0 min 28 0
  • ஆபத்தான காற்றின் தரம் காரணமாக டெல்லி நிர்வாகம் தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டத்தின் (Graded Response Action Plan-GRAP) 3 ஆம் கட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
  • காற்றின் தரக் குறியீடு (AQI) ஆனது 667 அளவினை எட்டியதால் டெல்லி 'ஆபத்தான நிலை' என்ற பிரிவில் வைக்கப்பட்டது.
  • BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் இலகுரக மோட்டார் வாகனங்கள் நகரத்திற்குள் இயங்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
  • அத்தியாவசியப் பொருட்கள் அல்லது சேவைகளை எடுத்துச் சென்றாலன்றி, BS-IV டீசல் நடுத்தர சரக்கு வாகனங்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளன.
  • தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) முழுவதும் கட்டுமானம், இடிப்பு மற்றும் தூசிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்