காற்று தர மேலாண்மை ஆணையம் ஆனது ஒட்டுமொத்த தேசிய தலைநகரப் பகுதிக்கும் (NCR) தரப்படுத்தப்பட்ட எதிர் நடவடிக்கை செயல் திட்டத்தை (GRAP) திருத்தியமைத்துள்ளது.
டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 'மிகவும் மோசமான' பிரிவில் கிட்டத்தட்ட 360 ஆக இருந்தது.
GRAP IV ஆம் நிலை நடவடிக்கைகள் மூன்றாம் நிலைக்கு மாற்றப்பட்டதால் கடுமையான விதிகள் முன்னதாகவே தொடங்கப்படலாம்.
டீசல் எரிபொருளில் இயங்கும் மின்னாக்கிகளைத் தவிர்ப்பது மற்றும் அதிகப் பொதுப் போக்குவரத்தைச் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் உட்பட இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலை நடவடிக்கைகளுக்கு மாற்றப்பட்டன.
திருத்தப்பட்ட GRAP இரண்டாம் நிலையின் கீழ், NCR அலுவலகங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெவ்வேறு அட்டவணை நேரங்களைப் பயன்படுத்தும்.
டெல்லியின் சராசரி AQI மற்றும் மாசு முன்னறிவிப்புகளின் அடிப்படையில் GRAP அமல்படுத்தப் படுகிறது.