டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது, கடுமையான பக்கவாத சிகிச்சைக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூளை ஸ்டெண்டின் மீதான இந்தியாவின் முதல் பிரத்தியேக மருத்துவப் பரிசோதனையை நடத்தியது.
GRASSROOT என பெயரிடப்பட்ட இந்தச் சோதனை, கிராவிட்டி மெடிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட சூப்பர்நோவா ஸ்டென்ட்-ரெட்ரீவரை மதிப்பீடு செய்தது.
GRASSROOT என்பது Gravity Stent-Retriever System for Reperfusion of Large Vessel Occlusion Stroke Trial என்பதைக் குறிக்கிறது.
இது இஸ்கிமிக் பக்கவாதத்தின் (மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு) உயிருக்கு ஆபத்தான பாதிப்பான பெரு நாள அடைப்பு (LVO) பக்க வாதங்களின் மீது கவனம் செலுத்தியது.
சூப்பர்நோவா சாதனம் என்பது மூளை தமனிகளில் இருந்து இரத்தக் கட்டிகளை அகற்றப் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்டென்ட்-ரெட்ரீவர் ஆகும்.
இந்த முடிவுகள் அதிகப் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் காட்டின.
உள்நாட்டுத் தரவுகளின் அடிப்படையில், CDSCO (மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு) மருத்துவப் பயன்பாட்டிற்கான சூப்பர்நோவா ஸ்டெண்டை அங்கீகரித்தது.