17வது GRIHA (ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமைத் தரமிடல்) உச்சி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
"Innovate to Act for a Climate Resilient World" என்ற கருத்துருவுடன் நடைபெற்ற இந்த உச்சி மாநாடு ஆனது, இந்தியாவின் கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான மேம்படுத்தக் கூடிய பருவநிலை தீர்வுகளை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த உச்சி மாநாடு ஆனது கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் சந்தை உத்திகள் மூலம் இந்தியாவின் கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான பருவநிலை தகவமைவுத் தீர்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் நகர்ப்புற மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான பருவநிலை உத்திகளை ஊக்குவிப்பதற்காக GRIHA சபையினால் இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.