GROWTH - India தொலை நோக்கியின் முதலாவது அறிவியல் கண்காணிப்பு
November 25 , 2018 2581 days 927 0
லடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH - India தொலை நோக்கியானது முதன்முறையாக தனது கண்டுபிடிப்பைப் பதிவு செய்து இருக்கின்றது.
GROWTH - India என்பது பேரண்டத்தில் மாறுநிலை நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக பல நாடுகள் இணைந்து செயல்படுத்தும் முன்முயற்சியான மாறுநிலை நிகழ்வுகள் நிகழ்வதை கண்காணிக்கும் உலக நிலை உணர்த்தி (GROWTH - Global Relay of Observatories Watching Transients Happen) என்ற அமைப்பின் ஒரு பகுதியாகும்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி, தைவான், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த முன்முயற்சியில் பங்கு பெற்றுள்ள நிறுவனங்களாகும்.
GROWTH - India என்பது அண்ட நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது முற்றிலும் முழுவதுமான எந்திரவியல் (Robotics) தொலைநோக்கியாகும்.