28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள GRS 1915+105 கருந்துளையானது மாறு நிலையிலான மற்றும் அசாதாரண நடத்தையை வெளிப்படுத்துகிறது.
இது 12 சூரியனின் நிறையிலான கருந்துளை மற்றும் ஒரு துணை நட்சத்திரத்துடன் கூடிய கருந்துளை ஊடு கதிர் இருமை அமைப்பு ஆகும்.
2015 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட், இந்த கருந் துளையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
GRS 1915+105 கருந்துளையிலிருந்து வரும் ஊடுகதிரின் பிரகாசம் ஆனது சில நூறு வினாடிகள் நீடிக்கும் குறைந்த ('dip') மற்றும் உயர் ('non-dip') கட்டங்களுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
அதிக பிரகாசமான கட்டங்களின் போது, நிலையற்ற கால அளவு கொண்ட சீரான வடிவிலான அலைவு (Quasi-periodic Oscillations- QPOs) எனப்படும் விரைவான ஊடு கதிர் ஒளிர்வுகள் வினாடிக்கு சுமார் 70 முறை நிகழ்கின்றன.
இது கருந்துளையைச் சுற்றியுள்ள ஒரு சிறிய, அதிக வெப்பமடைந்த செய்யப்பட்ட பிளாஸ்மா கொரோனாவுடன் தொடர்புடையது.
இதில் பிரகாசம் குறையும் போது, கொரோனா விரிவடைந்து குளிர்ச்சியடைகிறது, இதனால் ஒளிர்வுகள் மறைந்துவிடும்.
இந்த வேகமான QPO சமிக்ஞைகளுக்கு அலைவுறும் கொரோனா அடுக்கு தான் காரணம் என்று இது கூறுகிறது.