GSLV மாக் 3 சந்திரயான் 2 விண்கலன்
July 17 , 2019
2125 days
796
- ஜிஎஸ்எல்வி மாக் 3 ஏவு வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் – 2 செலுத்துதலானது தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
- இஸ்ரோவின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் சமீபத்திய விண்கலன் ஜிஎஸ்எல்வி மாக் – 3 ஆகும்.

- இதுவரை இரண்டு முறை செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு இது கொண்டுச் சென்றுள்ளது.
- இது பின்வருவனவற்றால் இயக்கப்படுகின்றது.
- முக்கிய திரவ என்ஜின்
- இரண்டு திட உந்துகலன்கள்
- கிரையோஜெனிக் என்ஜின்
- கிரையோஜெனிக்ஸ் என்பது குறைந்த வெப்பநிலையில் பொருட்களின் செயல்படும் விதம் குறித்த அறிவியலாகும்.
- ஜிஎஸ்எல்வி விண்கலன்கள் அதிக எடையுள்ள செயற்கைக் கோள்களைத் தாங்கி, விண்வெளியின் தொலைதூர பகுதிக்குப் பயணிக்கும் திறன் கொண்டது.
Post Views:
796