TNPSC Thervupettagam

GST மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்

September 29 , 2025 3 days 41 0
  • மத்திய நிதி அமைச்சகமானது புது டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தினைத் (GSTAT) தொடங்கியுள்ளது.
  • GSTAT ஆனது தொழில்நுட்ப ஈடுபாடுகளற்ற முடிவுகள், எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள், டிஜிட்டல் முறையிலான வரித் தாக்கல்கள், மெய்நிகர் விசாரணைகள் மற்றும் வழக்கு கையாளுதலுக்கான கடுமையான காலக்கெடுவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள்  மற்றும் ஏற்றுமதியாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் சட்ட ரீதியான குறைபாடுகளைக் குறைக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், வழக்குத் தாமதங்களை நிவர்த்தி செய்யவும் இந்த தீர்ப்பாயம் முயலும்.
  • இயங்கலை வழி மேல்முறையீட்டுத் தாக்கல், வழக்கு கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் விசாரணைகளைச் செயல்படுத்துவதற்காக GSTAT இணைய நீதிமன்ற வலை தளம் வெளியிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்