TNPSC Thervupettagam

GUAREX மற்றும் SOYDEX

July 11 , 2021 1448 days 574 0
  • தேசியப் பண்டக வகையீட்டுப் பரிமாற்றமானது  (NCDEX - National Commodity and Derivatives Exchange) வேளாண் பொருட்கள் பிரிவில் இந்தியாவிலேயே முதன்முறையாக துறை சார்ந்த குறியீடுகளை வெளியிட்டுள்ளது.
  • NCDEX ஆனது இந்தியாவின் வேளாண் பொருட்கள் பரிமாற்ற அமைப்பாகும்.
  • இந்தக் குறியீடுகளானது GUAREX மற்றும் SOYDEX ஆகியனவாகும்.
  • இந்தக் குறியீடுகளானது குவார் வகை மற்றும் சோய் வகை ஆகியவற்றின் செயல்திறனைக் குறிக்கும்.
  • GUAREX என்பது வருவாய் அடிப்படையிலான ஒரு குறியீடாகும்.
  • இது நிகழ்நேர அடிப்படையில் குவார் விதை, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பிளவுப் படுத்தப்பட்ட குவார் கம் விதைகள் ஆகியவற்றிற்காக வருங்கால ஒப்பந்தங்களின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கிறது.
  • SOYDEX எனும் குறியீடும், சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் ஆகியவற்றிற்கான வருங்கால ஒப்பந்தங்களின் மீதான விலைமாற்றத்தைக் கண்காணிக்கிறது.
  • இந்த இரு குறியீடுகளும் விலை குறைந்த பொருட்களை அடையாளம் காண்பதற்கு கொள்முதல் செய்வோருக்கு (hedgers) உதவியாக இருக்கும்.
  • மேலும் இவை வர்த்தக உத்திகளையும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளையும் வழங்குகிறது.
  • வருங்கால ஒப்பந்தங்கள் என்பது வருங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒரு பொருளை வாங்குவதற்காகவோ அல்லது விற்பதற்காகவோ தரநிலைப்படுத்தப் பட்ட ஒரு சட்ட ரீதியிலான ஒப்பந்தமாகும்.
  • கொள்முதல் செய்வோர் (hedger) என்றால் உற்பத்திப் பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் ஒரு தனிநபர் அல்லது நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்