TNPSC Thervupettagam
August 28 , 2021 1459 days 667 0
  • வேளாண் பொருட்கள் பிரிவில் இந்தியாவின் முதல் துறைசார் குறியீடான “GUAREX” என்ற குறியீடு தேசியப் பண்டக வகையீட்டுப் பரிமாற்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்ட பிளவுபட்ட கொத்தவரை மற்றும் கொத்தவரை விதைகள் மீதான வருங்கால ஒப்பந்தங்களின் செயல்பாட்டினை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கும் ஒரு விலை அடிப்படையிலான குறியீடே GUAREX ஆகும்.
  • இந்தக் குறியீடானது மதிப்புத் தொடரில் பல வாய்ப்புகளை வழங்கும்.
  • இக்குறியீட்டில் சுத்திகரிக்கப்பட்ட பிளவுபடுத்தப்பட்ட கொத்தவரை மற்றும் கொத்த வரை விதைகளின் மதிப்பு முறையே 63% மற்றும் 37% ஆகும்.
  • இந்தியா உலகின் மிகப்பெரிய கொத்தவரை உற்பத்தி நாடாகும்.
  • ராஜஸ்தான் நாட்டின் முன்னணி கொத்தவரை உற்பத்தியாளராக திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்