TNPSC Thervupettagam
July 6 , 2025 7 days 42 0
  • ஜப்பான் நாடானது, சமீபத்தில் 50வது மற்றும் கடைசி H-2A ஏவு கலத்தினை மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • இந்த ஏவுகலமானது பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் நீரியல் சுழற்சி கண்காணிப்பு செயற்கைக் கோளை (GOSAT-GW) விண்வெளிக்கு ஏந்திச் சென்றது.
  • பருவநிலை மாற்றத்தினை ஆய்வு செய்வதற்காக என GOSAT-GW ஆனது பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையைக் கண்காணிக்கும்.
  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக (JAXA) மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது H-2A ஏவுகலத்தினை உருவாக்கியது.
  • 2001 ஆம் ஆண்டில் முதன்முதலில் விண்ணில் ஏவப் பட்டதிலிருந்து, H-2A ஆனது ஒரே ஒரு தோல்வியுடன் மட்டும் 98% வெற்றி விகிதத்தைக் கொண்டிருந்தது.
  • இந்த ஏவுகலம் ஆனது புவிநிலைச் சுற்றுப்பாதை, நிலவின் சுற்றுப்பாதை மற்றும் 2010 அகாட்சுகி வெள்ளிக் கோள் ஆய்வு போன்ற கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
  • 50 ஆய்வுப் பயணங்களுக்குப் பிறகு, H-2A பயன்பாடு நிறுத்தப்பட்டு, செலவு குறைந்த H3 ஏவுகலம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்