July 25 , 2021
1457 days
616
- இந்தியாவில் H5N1 பறவைக் காய்ச்சலின் காரணமாக ஏற்பட்ட இந்த ஆண்டின் முதல் உயிரிழப்பானது பதிவாகியுள்ளது.
- இது உலகெங்கிலும் உள்ள காட்டுப் பறவை இனங்களில் இயற்கையாகவே காணப் படும் A வகை பறவைக் காய்ச்சல் வைரசினால் ஏற்படுத்தப்படும் நோயாகும்.
- A வகை பறவைக் காய்ச்சல் வைரசானது அதன் மேற்பரப்பிலுள்ள இரு புரதங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- அவை, ஹெமாக்குளுட்டினின் (HA- Hemagglutinin) மற்றும் நியூராமினிடேஸ் (NA - Neuraminidase) ஆகும்.
- இந்திய நாடானது 2019 ஆம் ஆண்டில் பறவைக் காய்ச்சல் அற்ற (H5N1) ஒரு நாடாக அறிவிக்கப் பட்டது.
- இந்த நிலையானது மற்றுமொரு தொற்று ஏற்படும் வரை மட்டுமே நீடித்தது.

Post Views:
616