HAMMER என்பது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பிரான்சில் உள்ள சஃப்ரான் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு துல்லியமான வழி காட்டப்பட்ட வானிலிருந்து நிலம் மீது ஏவப்படும் ஆயுதமாகும்.
ஹேமர் என்பது விரைந்து செயல்படுகின்ற நவீன நெடுந்தூர வெடிமருந்து தாக்குதல் வரம்பு என்பதைக் குறிக்கிறது.
இது மிக கடினமான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க ஒரு நவீன வழிகாட்டுதல் அமைப்பை GPS INS (புவியிடங்காட்டி அமைப்பு செயலாற்ற வழிச்செலுத்துதல் அமைப்பு), அகச்சிவப்பு அல்லது சீரொளிக் கற்றையைப் பயன்படுத்துகிறது.
இது தாக்குதலுக்கான தொடக்க வரம்பிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும்.
இது ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது என்ற நிலையில் மேலும் இதனை LCA தேஜாஸ் விமானங்களில் பொருத்திப் பயன்படுத்த இயலும்.