TNPSC Thervupettagam
May 12 , 2025 17 hrs 0 min 56 0
  • பாகிஸ்தான் மேற்கொண்ட ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய இராணுவமானது சமீபத்திய இஸ்ரேலிய HAROP ஆளில்லா விமானங்களுடன் பாகிஸ்தானின் பல வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளையும் குறி வைத்துத் தாக்கியது.
  • HAROP ஆளில்லா விமானங்கள் ஆனது, ஒரு வகை வான்வழிப் போர் விமானமாகும்.
  • அவை சுமந்து செல்லும் வெடி பொருளுடன், அதன் இலக்குகளைத் தாக்குவதன் மூலம் அழிவை ஏற்படுத்துகின்றன.
  • இதனால், அவை "தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா விமானங்கள்" மற்றும் "காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்" என்ற பெயர்களைப் பெற்றன.
  • அவை UAV (ஆளில்லா வான்வழி வாகனம்) மற்றும் ஒரு எறிகணையின் பண்புகளை ஒருங்கிணைந்துக் கொண்டுள்ளன.
  • போர்க்களத்திற்கு வெளியே உள்ள ஒரு தளத்தில் இருந்து ஏவப்படுகின்ற இந்த HAROP ஆளில்லா விமானங்கள் 200 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.
  • இலக்கினைக் குறி வைத்துத் தாக்கும் ஆயுத அமைப்புகளாக, அவை எதிரி நாட்டின் பகுதிகளுக்கு மேலே பறந்து, அதன் இலக்கிற்கு என்று காத்திருந்து, பின்னர் அதனைத் தாக்குகின்றன.
  • அவை ஆளில்லா கடற்பரப்பு வாகனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், விநியோக கிடங்குகள், பீரங்கிகள் மற்றும் வான் வழிப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்