தமிழ்நாடு மாநில வனத்துறையானது HAWK (விரோத நடவடிக்கைகளுக்கான முக்கிய கண்காணிப்பு அமைப்பு) என்ற டிஜிட்டல் வனவிலங்குக் குற்றக் கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக WTI (இந்திய வனவிலங்கு அறக் கட்டளை) மற்றும் NTT DATA ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட HAWK அமைப்பினை ஏற்றுள்ள 3வது மாநிலம் இதுவாகும்.
இதன் கீழான பிரிவுகளில் பெரெக்ரைன் (குற்ற மேலாண்மை), ஷிக்ரா (இறப்புப் பதிவு), ஹாரியர் (குற்றவாளிகளின் கண்காணிப்பு) மற்றும் கெஸ்ட்ரல் (மரபுத் தரவுகள்) ஆகியவை அடங்கும்.
அதிகளவு குற்றம் நடைபெறும் இடங்களைக் கண்டறிதலுக்கான NER (பெயரிடப்பட்ட நிறுவன அங்கீகாரம்), வலையமைப்புப் பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்பு மாதிரியாக்கத்தினை HAWK கொண்டுள்ளது.
இது CCTNS (குற்றம் மற்றும் குற்றக் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகள்) உடன் API (செயல்பாட்டு நிரலாக்க இடைமுகம்) ஒருங்கிணைப்பை ஆதரிக்கிறது.