அமெரிக்க நாடானது இந்தியாவிற்கு HawkEye 360 என்ற தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
HawkEye 360 என்பது புவியின் தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் வலையமைப்பை இயக்கும் ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமாகும்.
இந்த செயற்கைக்கோள்கள் ஆனது கப்பல்கள், விமானங்கள், வாகனங்கள் மற்றும் கடலோர அமைப்புகளிலிருந்து வரும் சில ரேடியோ அதிர்வெண் (RF) சமிக்ஞைகளைக் கண்காணிக்கின்றன.
இது கண்காணிப்பிலிருந்துத் தப்பிக்க தனது தானியங்கி அடையாள அமைப்புகளை (AIS) அணைக்கும் கப்பல்களைக் கண்டறிவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த 'மறைவு நிலையில் உள்ள' கப்பல்கள் சர்ச்சைக்குரிய நீர்நிலைகள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகள் நிகழும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்கச் சவால்களை ஏற்படுத்துகின்றன.