HDFC - ஐந்தாவது மிகப்பெரிய நுகர்வோர் நிதிச் சேவை நிறுவனம்
June 17 , 2018 2516 days 825 0
HDFC நிறுவனம் போர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட நுகர்வோர் நிதிச் சேவைப் பிரிவில் உலக அளவில் 5வது மிகப்பெரிய பொது நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 7வது இடத்திலிருந்து HDFC வங்கி முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நிறுவனம் இந்தியா புல்ஸ் வீட்டுவசதி நிறுவனமாகும். (13வது இடம்).
ஒட்டு மொத்தப் பட்டியலில், சீனாவின் வங்கி நிறுவனமான ICBC முதலிடத்திலும், HDFC கடந்த ஆண்டின் 404வது இடத்திலிருந்து முன்னேறி 321வது இடத்திலும் உள்ளன.
16வது வருடாந்திர போர்ப்ஸ் உலகளாவிய 2000 நிறுவனங்கள் பட்டியல் 60 நாடுகளிலிருந்து பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
போர்ட்ஸ் Fact-Set ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குளோபல் 2000 என்ற பட்டியலை தயாரித்துள்ளது.