TNPSC Thervupettagam

HealthAI உலகளாவிய ஒழுங்குமுறை வலையமைப்பு

September 10 , 2025 12 days 39 0
  • சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியா HealthAI உலகளாவிய ஒழுங்கு முறை வலையமைப்பில் (GRN) இணைந்துள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தரவு அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (ICMR - NIRDHDS) மற்றும் IndiaAI ஆகியவை HealthAI மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து பாதுகாப்பு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும்.
  • அவை மருத்துவ அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் செயல்திறனைக் கண்காணிக்கும்.
  • இந்தியாவின் சுகாதார அமைப்பில் AI நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் பொறுப்பான AI ஏற்பினை விரைவுபடுத்துவதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நோயாளிப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஐக்கியப் பேரரசு மற்றும் சிங்கப்பூர் போன்ற முன்னோடி நாடுகளை HealthAI GRN உள்ளடக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்