சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் (AI) பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியா HealthAI உலகளாவிய ஒழுங்கு முறை வலையமைப்பில் (GRN) இணைந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தரவு அறிவியல் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (ICMR - NIRDHDS) மற்றும் IndiaAI ஆகியவை HealthAI மற்றும் பிற உறுப்பினர்களுடன் இணைந்து பாதுகாப்பு நெறிமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும்.
அவை மருத்துவ அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவின் செயல்திறனைக் கண்காணிக்கும்.
இந்தியாவின் சுகாதார அமைப்பில் AI நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் பொறுப்பான AI ஏற்பினை விரைவுபடுத்துவதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நோயாளிப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஐக்கியப் பேரரசு மற்றும் சிங்கப்பூர் போன்ற முன்னோடி நாடுகளை HealthAI GRN உள்ளடக்கியுள்ளது.