TNPSC Thervupettagam

HIV MTCT ஒழிப்பு – போட்ஸ்வானா

June 29 , 2025 15 hrs 0 min 37 0
  • தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவுவதை (MTCT) ஒழிப்பதில் தங்கத் தர நிலை என்ற உலக சுகாதார அமைப்பின் நோய் ஒழிப்பு அந்தஸ்தை அடைந்த முதலாவது நாடாக போட்ஸ்வானா மாறியது.
  • இது குழந்தைகளில் புதிய HIV தொற்றுகளை 100,000 நேரடிப் பிறப்புகளுக்கு 250க்கும் குறைவாகக் குறைத்தது.
  • HIV பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகாலத்திற்கு முந்தைய பராமரிப்பு, HIV பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்கான சேவை வழங்கீட்டுப் பரவல் 90 சதவீதத்திலிருந்து 95% ஆக அதிகரித்தது.
  • போட்ஸ்வானா நாடானது ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் வெள்ளி நிலை அந்தஸ்தை அடைந்திருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில், HIV MTCT ஒழிப்பில் முன்னேற்றத்திற்காக நமீபியாவிற்கு வெண்கல நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • ஹெப்படைடிஸ் B பாதிப்பின் MTCT பரவலை ஒழித்ததற்காக வெள்ளி தரத்தைப் பெற்ற முதல் நாடு நமீபியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்