தாயிடமிருந்து குழந்தைக்கு HIV பரவுவதை (MTCT) ஒழிப்பதில் தங்கத் தர நிலை என்ற உலக சுகாதார அமைப்பின் நோய் ஒழிப்பு அந்தஸ்தை அடைந்த முதலாவது நாடாக போட்ஸ்வானா மாறியது.
இது குழந்தைகளில் புதிய HIV தொற்றுகளை 100,000 நேரடிப் பிறப்புகளுக்கு 250க்கும் குறைவாகக் குறைத்தது.
HIV பாதிப்புள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான பேறுகாலத்திற்கு முந்தைய பராமரிப்பு, HIV பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்கான சேவை வழங்கீட்டுப் பரவல் 90 சதவீதத்திலிருந்து 95% ஆக அதிகரித்தது.
போட்ஸ்வானா நாடானது ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில் வெள்ளி நிலை அந்தஸ்தை அடைந்திருந்தது.
2023 ஆம் ஆண்டில், HIV MTCT ஒழிப்பில் முன்னேற்றத்திற்காக நமீபியாவிற்கு வெண்கல நிலை அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஹெப்படைடிஸ் B பாதிப்பின் MTCT பரவலை ஒழித்ததற்காக வெள்ளி தரத்தைப் பெற்ற முதல் நாடு நமீபியா ஆகும்.