TNPSC Thervupettagam
August 5 , 2025 54 days 129 0
  • லடாக்கின் சோ கர் பள்ளத்தாக்கில் கிரக ஆய்விற்கான இமயமலை நிலையம் (HOPE) திட்டத்தினை இஸ்ரோ தொடங்கியது.
  • இஸ்ரோ நிறுவனமானது, இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST), இராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம் (RGCB), ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பெங்களூரு விண்வெளி மருத்துவ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
  • 4530 மீட்டரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுப் பணியானது அதிகப் புற ஊதா கதிர்வீச்சு, குறைந்த காற்று அழுத்தம் மற்றும் கடுமையான குளிர் ஆகியவை  செவ்வாய்க் கிரகத்தில் உள்ள சூழ்நிலைகளை உருவகப்படுத்துகிறது.
  • இது எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய் ஆய்வுப் பயணங்களுக்கான மனித உடலியல் மற்றும் உளவியல் எதிர் வினைகளை பரிசோதிக்கிறது.
  • இந்தச் சோதனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சகிப்புத் தன்மை ஆகியவை அடங்கும்.
  • 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட லடாக் மனித ஒப்புமை ஆய்வுத் திட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அனுகாமி  தனிமைப்படுத்தல் ஆய்வு ஆகியவை இதனுடன் தொடர்புடைய முந்தைய பணிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்