தமிழ்நாடு மாநிலம் ஆனது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தைத் தொடங்க உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ள அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப் படும்.
இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 27,000 குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கப்படும்.
ஒட்டு மொத்தமாக, 38 மாவட்டங்களில் சுமார் 3,38,000 சிறுமிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கான திட்டமாகும்.
மாநில அரசானது, 36 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்பதோடு மேலும் இத்திட்டம் மூலம் அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளது.