ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து மீவேகத் தொழில்நுட்ப செயல்முறை வாகனத்தின் (HSTDV - Hypersonic Technology Demonstrator Vehicle) முதலாவது சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) நிகழ்த்தியுள்ளது.
HSDTV திட்டத்தின் கீழ் DRDO “ஸ்கரம் ஜெட் இன்ஜினனால்” இயக்கப்படக் கூடிய மீவேக வாகனத்தை மேம்படுத்துகின்றது.
இதனைக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்த முடியும்.
இதனை எதிர்காலத்தில் நீண்ட தொலைவு கொண்ட ஏவுகணை அமைப்புகளிலும் பயன்படுத்த முடியும்.