HungerMap LIVE : உலகளாவியத் தகவல்கள் மற்றும் முக்கியப் போக்குகள்
September 20 , 2023 661 days 407 0
உலக உணவுத் திட்ட அமைப்பானது “HungerMap LIVE: உலகளாவியத் தகவல்கள் மற்றும் முக்கியப் போக்குகள்” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது கடுமையான பட்டினி நிலையின் முக்கியக் குறிகாட்டிகளைக் கண்காணிக்கும் நிகழ்நேரக் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
இதில் வீடுகளில் உணவு நுகர்வு, வாழ்வாதாரம், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, குழந்தை இறப்பு மற்றும் தூய்மையான குடிநீருக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
உலகளாவியப் பிரச்சினையான பட்டினி நிலை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை 2015 ஆம் ஆண்டு முதல் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது.
இந்தப் போக்குகள் பெருந்தொற்று, மோதல்கள், பருவநிலை மாற்றம் மற்றும் உள்ளார்ந்த ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட காரணிகளின் கலப்பினால் தீவிரம் அடைகின்ற நிலையில் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணியாக அமைகின்றது.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின்படி, உலகளவில் 828 மில்லியன் பேர் நாள் பட்ட பட்டினி நிலையில் உள்ளனர்.
53 நாடுகளில் 193 மில்லியன் பேர் கடுமையான பட்டினி நிலையை எதிர் கொள்ளச் செய்கின்றனர்.
12 நாடுகளில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கையில் 33% பேர் போதிய உணவு உட்கொள்ளாத நிலையில் உள்ளனர் .
சோமாலியா, ஆப்கானிஸ்தான், சிரிய அரபுக் குடியரசு, நைஜர், மாலி, ஹைத்தி மற்றும் சில நாடுகளில் உணவுப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, நமீபியா மற்றும் பிற நாடுகளில் சந்தைகளை அணுகுவதில் அதிக சவால்கள் உள்ளன.