ஹுருன் ஆராய்ச்சி நிறுவனமானது, ஹுருன் சுயமாக உருவான 40 வயதிற்குட்பட்ட கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
40 வயது மற்றும் அதற்கும் கீழான சுயமாக உருவான உலகக் கோடீஸ்வரர்களை (அமெரிக்க டாலர் மதிப்பில்) இது தரவரிசைப்படுத்துகிறது.
இது 40 வயது மற்றும் அதற்கும் கீழான, சுயமாக உருவான 80 கோடீஸ்வரர்களைப் பட்டியலிடுகிறது.
இப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
37 நபர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
25 நபர்களுடன் சீனா 2வது இடத்திலும், ஐக்கிய ராஜ்ஜியம் (8), இந்தியா (6) மற்றும் ஸ்வீடன் (3) ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களில் உள்ளன.
76 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சுகர்பெர்க், சுயமாக உருவான 40 வயதிற்குட்பட்ட உலகின் மிகப் பெரும் பணக்காரராக திகழ்கிறார்.
இவரைத் தொடர்ந்து, பைட் டான்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாங் யிமிங், FTX நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் பாங்க்மேன் பிரைடு, ஏர்பின்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் செஸ்கி, முகநூல் நிறுவனத்தின் இணை நிறுவனர் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் ஆகியோர் உள்ளனர்.