IAEA மற்றும் ஈரான் ஒத்துழைப்பு
June 29 , 2025
15 hrs 0 min
26
- சர்வதேச அணுசக்தி முகமையுடனான (IAEA) தனது அனைத்து ஒத்துழைப்பையும் நிறுத்துவதற்கு ஈரானின் பாராளுமன்றம் வாக்களித்தது.
- ஈரானிய அணுசக்தித் தளங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான IAEA, உலக அளவிலான அணுசக்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.
- ஈரான் நாடானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் ஆய்வுகளை அனுமதித்து வந்தது.
- NPT என்பது அணு ஆயுதங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கிலான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

Post Views:
26