IAU-ன் 24 மணி நேர ஆசியா மற்றும் ஓசீயானியா சாம்பியன்ஷிப்-2018
December 10 , 2018 2345 days 729 0
தைவானின் தைபேயில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான அதிவிரைவு ஓட்டத்திற்கான சர்வதேச மன்றத்தின் (IAU - International Association of Ultra Running) 24 மணி நேர ஆசியா மற்றும் ஓசீயானியா சாம்பியன்ஷிப் போட்டியில் உல்லாஸ் நாராயண் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இவர் சர்வதேச அதிவிரைவு ஓட்டப் பந்தயப் போட்டியில் தனிநபராக பதக்கத்தை வென்ற முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர்களான யோசிஹிகோ இசிகாவா (253 கிலோ மீட்டர்) மற்றும் நொபுயூக்கி தக்காஹாசி (252 கிலோ மீட்டர்) ஆகியோருக்குப் பின்னால் இவர் போட்டியை நிறைவு செய்துள்ளார்.
இந்திய அணியைச் சேர்ந்த நாராயண், சுனில் சர்மா மற்றும் எல்.எல் மீனா ஆகியோர் தங்களது ஒட்டுமொத்த தொலைவான 644 கிலோ மீட்டரைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
அணிகளுக்கானப் பிரிவில் 756 கிலோ மீட்டர் தொலைவை அடைந்து ஜப்பான் தங்கப் பதக்கத்தையும் 684 கிலோ மீட்டர் தொலைவை அடைந்து ஆஸ்திரேலியா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
அதிவிரைவு ஓட்டம்
அதிவிரைவுப் போட்டியானது பாரம்பரியமான போட்டிகளில் உள்ள தொலைவைவிட மிக நீண்ட தொலைவையுடைய ஓட்டம் கொண்ட போட்டியாக இருக்கும்.
போட்டியாளர்கள் போட்டிப் பிரிவின் குறிப்பிட்ட தொலைவு அல்லது குறிப்பிட்ட நேரம் என்ற 2 வெவ்வேறு வகைகளில் பங்கேற்கிறார்கள்.