ஒளிபரப்பு நிறுவனங்களின் உயர்நிலை அமைப்பான இந்திய ஒளிபரப்பு அமைப்பானது (Indian Broadcasting Foundation - IBF) டிஜிட்டல் ஒளிபரப்பு தளங்களையும் உள்ளடக்கும் வகையில் தனது வரம்பை விரிவுபடுத்தியுள்ளது.
மேலும் அதன் பெயரானது இந்திய ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் அமைப்பு (Indian Broadcasting and Digital Foundation - IBDF) எனவும் மாற்றப் பட்டுள்ளது.
இதன் மூலம்ஒளிபரப்பாளர்கள் மற்றும் இணையதள ஒளிபரப்பு சேவை வழங்கும் தளங்கள் (OTT) ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படும்.
டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கும் அமைப்புகளுக்காக “டிஜிட்டல் ஊடகத் தகவல் கட்டுப்பாட்டு மன்றம்” (Digital Media Content Regulatory Council – DMCTC) எனும் சுயக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.