தொற்றுமிக்க மாட்டின ரைனோட்ராச்சீடிஸ் (IBR) தொற்றுக்கு எதிரான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிளைகோபுரோட்டீன் E (gE) நீக்கப்பட்ட DIVA மார்க்கர் தடுப்பூசி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரக்சா-IBR என பெயரிடப்பட்ட இந்தத் தடுப்பூசியானது, மலட்டுத்தன்மை, கருக் கலைப்பு மற்றும் இந்த நோயுடன் தொடர்புடைய பால் உற்பத்திக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்.
IBR ஆனது இந்தியாவில் பரவலாக காணப்படுகின்ற, மாட்டின ஹெர்பெஸ் வைரசினால் (BHV-1) ஏற்படுகிறது.
தூசிப் படலப் பாதை வழியாகப் பரவுகின்ற இந்த நோய் ஆனது இனப்பெருக்க அமைப்புகளை பாதிக்கிறது.
இது காளைகளிலிருந்து கறவை விலங்குகளுக்கு விந்து மூலமாகவும் பரவுகிறது.
கருவுறாமை, கருக்கலைப்பு மற்றும் குறைந்த பால் உற்பத்தி ஆகியவை இந்த நோயின் முக்கியத் தாக்கங்களில் சிலவாகும்.
இந்தத் தொற்றிற்கு இந்தியாவில் தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு இந்த நோய்க்கு எதிராக இது வரை குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.